100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு : ராமேஸ்வரத்தில் பக்தர்கள் இன்றி வெறிச்
ADDED :7 hours ago
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளரிடம் 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து பலவகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக இன்று தமிழக முழுவதும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் புனிதம், சுற்றுலா தலமான ராமேஸ்வரத்தில் நேற்று வெளியூர் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் கோயிலுக்குள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய வெளியூர் பக்தர்கள் இன்றி, தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு வெற்றி அடைந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.