உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடத்துக்குளத்தில் மண்டல பூஜை துவக்க விழா

மடத்துக்குளத்தில் மண்டல பூஜை துவக்க விழா

உடுமலை:மடத்துக்குளம், அரியநாச்சிபாளையம் ஐயப்ப சுவாமி கோவில், 108 பால்குட கலச அபிஷேக விழா வரும் 28ம் தேதி துவங்குகிறது.மடத்துக்குளம், அரியநாச்சிபாளையம் ஜோதி நகரில் ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது.

கோவில், ஏழாம் ஆண்டு மண்டல பூஜை துவக்க விழா மற்றும் 108 பால்குட கலச அபிஷேக விழா, வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கிறது.வரும் 28ம் தேதி மாலையில், ஐயப்பன் கோவிலி லிருந்து, குதிரை வாகனத்தில் ஐயப்ப சுவாமிகள், அமராவதி ஆற்றுக்கு ஆராட்டுக்குச்செல்லுதல், மாலை, 5:00 மணிக்கு ஆற்றில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மறுநாள், காலை, 7:00 மணிக்கு, 108 பால்குட கலச பூஜை நடக்கிறது.காலை, 8:30 மணிக்கு சுவாமிகளுக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் 24 வகை மூலிகை அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !