பல்லடம் ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
ADDED :2124 days ago
பல்லடம்:பல்லடம் ஐயப்பன் கோவில் லட்சார்ச்சனை விழா, காவடி ஆட்டத்துடன் துவங்கியது. பல்லடம் சந்தைபேட்டை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை, சங்காபிஷேகம், மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா துவங்கியது. காலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது.
அதை தொடர்ந்து, வேத பாராயணம், 108 வலம்புரி சங்கு பூஜை, கலச ஆவாஹனம் ஆகியன நடந்தன.இடுவாய் ஓம் சரவணா காவடி குழுவினரின் காவடி ஆட்ட நிகழ்ச்சி பக்தர்களை கவர்ந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றும் (14ம் தேதி), லட்சார்ச்சனை, திருவீதி உலா, மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.