உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு குப்பியண்ணசாமி கோவிலில் 29ல் பொங்கல் விழா

ஈரோடு குப்பியண்ணசாமி கோவிலில் 29ல் பொங்கல் விழா

ஈரோடு: விஷக்கடிக்கு அருமருந்தாக விளங்கி வரும், ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, துக்காச்சி, 60 வேலம்பாளையம் குப்பியண்ணசாமி, செல்வக்குமாரசாமி கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, 20ம் தேதி தொடங்குகிறது.

அன்று கணபதி ஹோமம், எழுமாத்தூர் சத்தீஸ்வர், வரதராஜ பெருமாள், பொன்காளியம்மன், அங்காளம்மன், ஆயி அம்மன், அண்ணமார் சுவாமி, அத்தனூர் அம்மன், குப்பியண்ணசாமிக்கு அபிஷேகம் நடந்து, இரவில் பூச்சாட்டு நடக்கிறது. 21 முதல் 28 வரை, தினமும் அபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், 29ல் நடக்கிறது. 30ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !