கார்த்திகை கடைசி சோமவாரம்: கோயில்களில் சங்காபிஷேகம்
ADDED :2121 days ago
மதுரை: கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி, மதுரை கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. இன்று கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்குகள் சிவ லிங்க வடிவில் அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்து. இதேபோல் அனைத்து சிவன் கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.