உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்கத்தை கையில் ஏந்தி கிரிவலம் சென்ற பக்தர்கள்

சிவலிங்கத்தை கையில் ஏந்தி கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலை: சிவலிங்கத்தை கையில் ஏந்தி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில், கடந்த, 10ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் மஹா தீபம், 40 கி.மீ., தூரம் வரை பார்க்க முடியும். இந்த மஹா தீபத்தை காண, தினமும், பல்வேறு பகுதியிலிருந்து வரும், பக்தர்களால், கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது. இவ்வாறு வரும் பக்தர்கள் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, கிரிவலம் செல்கின்றனர். நேற்று, திருப்பூர் அடுத்த போயம்பாளையத்தை சேர்ந்த சதாசிவநாதர் கோவிலை சேர்ந்த பக்தர்கள், 50 பெண்கள் உள்பட, 120 பேர், கையில் லிங்கங்களை ஏந்தியவாறு, சிவ மந்திரம் கூறி, கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !