ஆந்திராவில் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி
ADDED :2125 days ago
சென்னை: தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வருகிற டிசம்பர் 27,28 வெள்ளி, சனிக்கிழமை, ஆந்திர மாநிலம், கர்நுால் மாவட்டம், ஸ்ரீசைலம், பிரமராம்பா உடனாகிய, அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில் 219 வது உழவாரப்பணியையும், 29.12.19 ஞாயிற்றுக்கிழமை கர்நுால் மாவட்டம், மகாநந்தி, காமேஸ்வரி உடனாகிய மகாநந்தீஸ்வரர் திருக்கோயிலில் 220 வது உழவாரப்பணியையும், செவ்வனே செய்கிறது.
தொடர்புக்கு:
எஸ். கணேசன் 9840 123 866