உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டபர்த்தியில் சாய்பாபாவின் மகா ஆராதனை: கவர்னர் கலந்து கொள்கிறார்!

புட்டபர்த்தியில் சாய்பாபாவின் மகா ஆராதனை: கவர்னர் கலந்து கொள்கிறார்!

புட்டபர்த்தி:சத்ய சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நாளை(24/4/12)புட்டபர்த்தியில் உள்ள மகா சமாதியில் மகா ஆராதனை மற்றும் சாய்பாபா பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா மாநில கவர்னர் எல்.நரசிம்மன் உள்ளீட்ட முக்கிய பிரமுகர்களும்,உலகமெங்கும் இருந்து வருகைதந்துள்ள சாய்பாபா பக்தர்களும் கலந்துகொள்கின்றனர். ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் இன்று (23/4/12)காலை 8 மணிக்கு குல்வந்த் ஹாலில் வேதபராயாணம் நடைபெறும்.,இதனை தொடர்ந்து "தெய்வத்துடனான அனுபவம் என்ற தலைப்பில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வர்.தொடர்ந்து குத்து விளக்கேற்றும் நிகழ்வு நடைபெறும் பின்னர் நடைபெறும் வரவேற்புரைக்கு பிறகு டாக்டர் சாமுவேல்,சுவாமி சுத்தானந்தா ஆகியோரின் சிறப்புரை நிகழும்.,தொடர்ந்து சாய் பஜனும்,மங்கள ஆரத்தியும் நடைபெறும்.இத்துடன் காலை நிகழ்ச்சி 10.30 க்கு நிறைவு பெறும்.மாலை நிகழ்ச்சி 5 மணிக்கு ரமணாஸ்ரமத்தை சேர்ந்த ஜெயராமன் சிறப்பு சொற்பொழிவும் அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.,பின்னர் சாய்பஜன் பாடப்பட்டு மங்கள ஆரத்தி இடம்பெறும். நாளை(24/4/12)காலை 8 மணிக்கு வேத பாராயணமும்,சாய் பல்கலைக்கழக மாணவர்களின் "குருவந்தனம் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும், தொடர்ந்து சாய் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களின் அறிக்கை வாசிக்கப்படும்.பின்னர் பகவான் சத்ய சாய்பாபா பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெறும்.பத்மஸ்ரீ டாக்டர் ஜி.வெங்கட்ராமன் எழுதிய இந்த புத்தகத்தை ஆந்திரா மாநில கவர்னர் எல்.நரசிம்மன் வெளியீட்டு பேசுவார்.தொடர்ந்து பஜன் மற்றும் மங்கள ஆரத்தி இடம் பெறும்.இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சாய்பாபா பக்தர்கள் பெருமளவில் வந்துள்ளனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் நன்கு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !