உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாவை பட்டில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்

திருப்பாவை பட்டில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப்பிறப்பு உற்ஸவம் நடந்தது. நேற்று இரவு 8:35 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள் திருப்பாவை பட்டு அணிந்து ரெங்கமன்னாருடன் எழுந்தருளினார். அப்போது கோயில் பசு, கன்றுகுட்டி, குதிரை அழைத்து வரப்பட்டன.ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சதீஷ்பட்டர் பூஜைகள் செய்தார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர்கள் அனந்தராமன், அரையர் பாலமுகுந்தன், சுதர்ஷன், வெங்கடேஷ், மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !