குமாரபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா
ADDED :2337 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, ஐயப்ப சுவாமி பிரார்த்தனை கூடத்தின் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், சுவாமி திருவீதி உலா நடந்தது.
காவிரி ஆற்றில் தீர்த்தக்குடங்கள் எடுத்தவாறு துவங்கிய திருவீதி உலா, சேலம் சாலை, பள்ளி பாளையம் சாலை, மேற்கு காலனி வழியாக ஐயப்ப சுவாமி பிரார்த்தனை மண்டபத்தில் நிறைவு பெற்றது. காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஐயப்பன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அருள்பாலித்தவாறு வந்தார். சுவாமிக்கு, 12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது.