உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் ஊர்வலம்

ஈரோடு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் ஊர்வலம்

ஈரோடு: ஈரோடு ஹரிஹர சுதன், ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், ஆண்டு தோறும் ஐயப்ப சுவாமி சிறப்பு வழிபாடு நடக்கிறது. நடப்பாண்டு விழா, 14ல் தொடங்கியது. நேற்று முன்தினம் 15ம் தேதி மாலை, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு ஊர்வலம் நடந்தது.

வ.உ.சி., பூங்கா ஆஞ்சநேயர் கோவில் முன் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்ப சுவாமி விக்ரஹ த்துக்கு மலர் அலங்காரம், சிறப்பு பூஜை செய்து, ஊர்வலம் தொடங்கியது. இதில் ஏராளமான பெண்கள் திருவிளக்குகளை ஏந்தி வந்தனர். பெரிய மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. அதையடுத்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !