கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED :9 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையொட்டி நேற்று இரவு 7:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, சுவாமிக்கு தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேலும் கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பத்ரகாளி கவசம் பாடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிளகாய் வற்றல் தீயில் ஏற்றி நிகும்பலா யாகம் நடந்தது.