காளஹஸ்தி சிவன் கோயிலில் உகாதி பண்டிகை; சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ நாம ஆண்டு உகாதி பண்டிகை தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழன் காலை 10.00 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்திஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றன.
கோயிலின் அபிஷேக குருக்கள் சுரேஷ் தலைமையில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சாமி அம்மையார்களுக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்திஷ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதிகாரிகள் கோயில் அருகில் தேர் வீதியில் அமைந்துள்ள பக்த கண்ணப்பர் கோயிலுக்கு பூஜை பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களை தலை மீது சுமந்துக்கொண்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்த கண்ணப்பருக்கு உகாதி பண்டிகையை யொட்டி வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு மற்றும் அவரது மனைவி, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குர்ரப்ப செட்டி தம்பதியினர், ரஜினி, சைலஜா மற்றும் கோவில் தலைமை அர்ச்சகர்கள் சம்மந்தம் குருக்கள் கருணாகர் , கோயில் துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, வித்யாசாகர் ரெட்டி, கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோவில் ஆய்வாளர் வெங்கடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.