உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் யுகாதி வழிபாடு; சிறப்பு திருமஞ்சனம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் யுகாதி வழிபாடு; சிறப்பு திருமஞ்சனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று யுகாதி உற்சவம் நடந்தது. அதிகாலை சுப்ரபாத சேவை, கோ பூஜைக்குப்பின் விஸ்வக்சேனர் வழிபாடு, கலச ஆவாஹன பூஜைகள் நடத்தப்பட்டது. பெருமாள் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர்களுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம் .ள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்திற்குப்பின் சாற்றுமுறை சேவை, அலங்கார தீபங்கள் வழிபாடுகள் நடத்தப்பட்டது. பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், பஞ்சமுக வராஹி அம்மன் கோவில்களிலும் யுகாதி சிறப்பு பூஜைகள் நடந்தன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !