தென் திருப்பதியில் தங்க ரதம் வைபவம்; மலையப்பசுவாமி உலா
ADDED :11 hours ago
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் தங்க ரதம் வைபவம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையொட்டி ஸ்ரீ மலையப்பசுவாமி, தங்க ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமாலை, நாமாவளி அர்ச்சனை போன்ற விஷேச பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து இன்று மாலை தங்க ரதத்தில், ஸ்ரீ மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. மேளதாளத்துடன் சுவாமி புறப்பாடு தொடங்கி, நான்கு மாட வீதிகளின் வழியாக உலா வந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.