உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோமம், சிறப்பு பூஜை

கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோமம், சிறப்பு பூஜை

நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு ஹோம பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !