மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயிலில் உடுக்கை நிகழ்ச்சி
ADDED :31 minutes ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காரமடை சாலை சிவன்புரத்தில், ஐயப்பன் கோவில் உள்ளது. மண்டல பூஜையை அடுத்து, முதல் நிகழ்ச்சியாக, ஐயப்பன் வரலாறு அறிவிக்கும் வகையில் உடுக்கை நிகழ்ச்சி நடந்தது. பாலக்காடு கள்ளே குலங்கரா பகுதியைச் சேர்ந்த, 15 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, உடுக்கை அடித்து ஐயப்பன் சுவாமியின் வரலாற்றை தெரிவிக்கும் பாடலை பாடினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டு களித்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.