உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபத் விழா ஐந்தாம் நாள்: வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உலா

திருவண்ணாமலை தீபத் விழா ஐந்தாம் நாள்: வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் மாட வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஐந்தாம் நாள் தீப திருவிழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்)  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி,  மாட வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !