அயோத்தி ராமர் கோயிலில் கோசாலை தொடக்கம்: ராம்லல்லாவுக்கு நாட்டுப் பசுவின் பாலில் அபிஷேகம்!
அயோத்தி, ஸ்ரீராமர் கோயில் வளாகத்தில், ஸ்ரீராம் நிவாஸ் அருகே கோசாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தக் கோசாலையில் ஆரம்பகட்டமாக 8 முதல் 10 நாட்டுப் பசுக்கள் பராமரிக்கப்பட உள்ளன. இந்தியாவின் பாரம்பரிய நாட்டுப் பசு இனங்கள் மட்டுமே இங்கு வளர்க்கப்படும். அவற்றிலிருந்து கிடைக்கும் தூய்மையான பால், தயிர் மற்றும் நெய் ஆகியவை குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவின் தினசரி பூஜை, அபிஷேகம் மற்றும் நைவேத்தியம் எனப்படும் போக்-பிரசாதத்திற்குப் பயன்படுத்தப்பட உள்ளன. கோசாலை அமைக்கும் பணியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க கோ பூஜை நடைபெற்றது. பசுக்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, கோசாலைப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டிப் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஸ்ரீராம்லல்லாவின் வழிபாட்டுக்குத் தேவையான பால், தயிர், நெய் ஆகியவற்றை நாட்டுப் பசுக்களிடமிருந்தே பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறையில் பசுக்களைப் பராமரிக்கும் இந்தத் திட்டம் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.