உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளழகர் கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவம்

கள்ளழகர் கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவத்தை முன்னிட்டு, நவ.24 காலை சுந்தரராஜ பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடக்கிறது.

பெரிய தோளுக்கினியானில் பெருமாளை எழுந்தருளச் செய்து திருமடப்பள்ளி நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6:15 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் பெருமாள், விஷ்வக்சேனர், சேத்திரபாலகர், கருடன், தாயார், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆண்டாள், சரஸ்வதி, கம்பத்தடி சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

பின்பு பிரகாரத்தில் எழுந்தருளும் பெருமாள், ஆழ்வார் சன்னதியில் தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்து குடைவரை வழியாக உறியடி மண்டபம் மேல்புறம் பார்சட்டத்தில் தீபத்துடன் எழுந்தருள்வார்.

பின்னர் புண்ணியாகவாசனம், புரோக் ஷணை பூஜைகள் நடத்தி, சொக்கப்பனை கொளுத்துதலுடன் தீப உற்ஸவம் நடக்கிறது. அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளி மலையாண்டி கோயில் கோம்பை கொப்பரையில் மாலை 6:45 மணிக்கு மேல் 300 லிட்டர் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்படும். ஏற்பாடுகளை இணை கமிஷனர் பொன்சுவாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !