உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாதர் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம்

வைத்தியநாதர் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம்

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமி என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் கடந்த 10-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கடந்த 15 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் செல்வ முத்துக்குமார சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதம் மந்திரங்கள் ஓதி திருமண சடங்கு சம்பிரதாயங்களை நடத்தினர். தொடர்ந்து மங்கல நாணை  அணிவித்து திருக்கல்யாண வைபவம்  நிறைவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !