தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் 18 படி பூஜை: தை பொங்கல் வரை தரிசிக்கலாம்
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல விரத காலத்தையொட்டி 18 படி பூஜை துவங்கியது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் புஷ்கலா தேவி சமேத தர்மசாஸ்தா கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் மண்டல பூஜை துவங்கியது. மூலவர் ஐயப்பன் சன்னதியில் 18 படிகள் அமைக்கப்பட்டு இரவு படி பூஜை துவங்கியது. பல்வேறு விதமான அபிஷேக தீபாராதனைகள் நடந்தன. 18 படிகளுக்கு தீபம் ஏற்றி மலர்கள் சாற்றி, படிகளில் காவல் காக்கும் தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதன்படி முதல் 5 படிகள் ஐம்புலன்கள், 6 முதல் 13 படிகள் 8 உணர்வுகள், 14 முதல் 16 முக்குணங்கள், 17, 18 ம் படிகள் ஞானம் மற்றும் மோட்ச நிலையை குறிக்கிறது. கோயிலில் பூஜைகள் நிறைவடைந்து இரவு மகா தீபாராதனையுடன், ஹரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்பட்டது. இந்த 18 படி பூஜை மண்டல விரத காலம் மற்றும் தைப்பொங்கல் சபரிமலை நடை அடைப்பு வரை நடக்க உள்ளது.