உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பருவமழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

பருவமழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அய்யனார் கோயிலுக்கு குதிரை ஊர்வலமாக தூக்கி வந்தனர்.


முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா,ஆயிரம் வள்ளியம்மன் கோயில் பூமிதி விழா நடந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெருங்கருணை கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர்.அய்யனார், ஆயிரம் வள்ளியம்மனுக்கு தினந்தோறும் சிறப்புபூஜை நடந்தது. பெருங்கருணையில் தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, ராக்கச்சி,பேச்சியம்மன்,பைரவர் உள்ளிட்ட தவழும் பிள்ளைகள் கீழக்குளம்,நல்லாங்குளம் வழியாக 7 கி.மீ., ஊர்வலமாக தூக்கி வந்தனர். கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்புபூஜைகள் நடந்தது. பின்பு அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர்.விவசாயம் செழிக்கவும் பருவமழை பெய்ய வேண்டியும் இந்த குதிரை எடுப்பு விழா கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !