வாலாஜாபாத் பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசை
ADDED :7 hours ago
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், நாய்க்கன்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு, மாசி மாத அமாவாசையையொட்டி பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. இரவு 7:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டும், அம்மன் சிலை மீது மஞ்சள் நீர் ஊற்றியும் அபிஷேகஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் வெளிபுறத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.