விழுப்புரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :197 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மகராஜபுரம் ஹவுசிங் போர்டு வளாகத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, 8ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 16ம் தேதி கணபதி பூஜையோடு துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், அம்மன் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, நாளை (20ம் தேதி) இரவு 7 மணிக்கு, குறத்தி அம்மன் வேடமிட்டு அம்மன் அலங்காரம் நடக்கிறது. 22ம் தேதி காலை 11 மணிக்கு அம்மன் வீதியுலா, அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், காளி, வீரன், காட்டேரி, வெள்ளாழக்கண்டன், பெரியாயி வேடம் அணிந்து செல்லுதல், மதியம் 2 மணிக்கு மயானகொள்ளை நடக்கிறது.