தைரியம் தந்த அனுமன் சாலிஸா: கேப்டன் ஸ்மித் மச்சார் பெருமிதம்
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிளைதுபாய் விமானத்தில், கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையிலும், பயணிகள் 174 பேரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி போனில் பேசினார்.
விமானி ஸ்மித்திடம் பிரதமர் பேசியதாவது, "நாடு முழுவதும் உங்களுக்காகப் பிரார்த்தனை நடந்து வருகிறது. உங்களுக்காகவும் உங்கள் உடல்நலத்திற்காகவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. உங்கள் துணிச்சல், சமயோசித புத்தி மற்றும் நிதானம் ஆகியவை பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. இந்தியர்கள் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, மாறாகப் பிறரைக் காப்பாற்றத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தவர்கள் என்று நாடு பெருமையுடன் கூறலாம்," என்றார்.
கண்ணீர் மல்க பேசிய ஸ்மித் மச்சார், ‘நான் மிகவும் சிரமத்தை உணரும் தருணங்களில் அனுமன் சாலிஸா உச்சரித்து தைரியத்தை வரவழைத்துக் கொள்வேன். விமானத்தில் தாக்குதல் நடந்தபோதும், அனுமன் சாலிஸாவை உச்சரித்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.