உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவில் பூமி பூஜை!

முருகன் கோவில் பூமி பூஜை!

கடம்பத்தூர்:ஒரு கோடி ரூபாய் செலவில், பன்னிருகை முருகன் கோவில் கட்டும் பணி, பூமி பூஜையுடன் நேற்று காலை துவங்கியது.கடம்பத்தூர் போலீஸ் நிலையில் அருகில், நெடுஞ்சாலையை ஒட்டி, சென்னை ஸ்ரீதர்ம சக்கரம் அறக்கட்டளை சார்பில், பன்னிருகை திருமுருகன் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. இங்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், லட்சுமி விநாயகர் கோவில், பனிரெண்டு கைகளுடன் மயில் மீது வீற்றிருக்கும் திருமுருகன் கோவில், ஐஸ்வரிய லட்சுமி சன்னதி, கிருஷ்ணர் பாதம் சன்னதி, ராகு, கேது சன்னதி, சனி பகவான் சன்னதி ஆகியவை ஒரே இடத்தில் கட்டப்பட உள்ளன.இதற்கான பூமி பூஜையில் கடம்பத்தூர், வெண்மணம்புதூர், கசவநல்லாத்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !