திருக்கோவிலூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கணக்குப்பிள்ளை தெருவில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு பெண்களின் திருவிளக்கு பூஜை நடந்தது. திருக்கோவிலூர், கணக்குபிள்ளை தெருவில் உள்ள, ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா நேற்று துவங்கியது. காலை 7:30 மணிக்கு ஐயப்பனுக்கு 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு பெண்கள் பக்தர்கள் திருவிளக்கு ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். சிறப்பு வழிபாடுகளுடன் நடந்த விளக்கு பூஜையில் பெண்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். நிறைவாக வாழை குடிலில் எழுந்தருளியிருந்த ஐயப்பனுக்கு ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இன்று மண்டல பூஜை விழாவில், திருவாபரணம் பெட்டி வீதிஉலா, சுவாமி வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மண்டல பூஜை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.