உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப அலங்காரத்தில் பெரியகுளம் பாலசாஸ்தா

புஷ்ப அலங்காரத்தில் பெரியகுளம் பாலசாஸ்தா

பெரியகுளம்: பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் புஷ்பஅலங்காரத்தில் ஐயப்பனை தரிசிக்க  ஏராளமான  பக்தர்கள் குவிந்தனர். பெரியகுளம் தென்கரை கம்பம் ரோடு பாலசாஸ்தா கோயில் பிரசித்திபெற்றதாகும். தினமும் காலை, மாலை பூஜை நடக்கிறது. இங்கிருந்து  ஐயப்ப பக்தர்கள் தினமும் பலர் இருமுடி கட்டி சபரிமலை சென்று வருகின்றனர்.  இசைக்கச்சேரியுடன் பஜனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் லட்சார்ச்சனை, பெரியகுளம் பகுதியில் ஐயப்பன் படம் ஊர்வலம் சென்றது.  மார்கழி மாதம் 4ம் நாளான நேற்று கோயில் முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோ  பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பூஜை நடந்தது. ஐயப்பன் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகாசக்தி மெகா அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பாலசாஸ்தா நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !