உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமளவள்ளி அம்மன் கோயிலில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை

கோமளவள்ளி அம்மன் கோயிலில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை

மயிலாடுதுறை: கோமளவள்ளி அம்மன் கோயிலில் அய்யப்ப பக்தர்களின் கன்னி பூஜை நடைபெற்றது.

நாகை மாவட்டம் சீர்காழி கீழவீதியில் எழுந்தருள் புரியும் கோமள வள்ளி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மாலை அய்யப்ப பக்தர்களின் கன்னி பூஜை நடைபெற்றது.

விநாயகர், முருகன், அய்யப்ப சுவாமிகளின் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முதன் முறையாக சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் அய்யப்ப பக்தர்களுக்கான கன்னி பூஜை பாலு குருசாமி, வீர.பாலு குருசாமி , ஜோதி குருசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இளையராஜா குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பக்தர்களால் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. மகா தீபாராதணை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் , பாஜக நிர்வாகிகள் சண்முகம், முருகன் மற்றும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கன்னி பூஜைக்கான ஏற்பாடுகளை பந்தல் சரவணன், முருகன், அப்பு, பிரதாப் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !