வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை விழா
ADDED :2131 days ago
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 33ம் ஆண்டு மண்டல பூஜைத் திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில், நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 5:30 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு நடுமலை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது.விழாவில், இன்று, காலை, 10:00 மணி முதல், அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 3:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்பசேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.