நவபாஷாணத்திற்கு ஐயப்ப பக்தர் வருகை அதிகரிப்பு
ADDED :2131 days ago
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தர்பணம் செய்யவும், பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தற்போது ஐயப்ப சுவாமிக்கு மாலைஅணிந்து விரதமிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் நவபாஷாணத்திற்கு வந்து நவக்கிரகங்களை வழிபட்டு செல்கின்றனர். அதிகாலை முதல் மாலை வரை தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், கடந்த சில வாரங்களாக ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், நவபாஷாண கடல் பகுதி களைகட்டியுள்ளது.