வைரவன்பட்டியில் மகா பைரவ ஹோமம்
திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா பைரவ ஹோமம் நடந்தது.
நேற்று மூலவர் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மூலபாலகால பைரவர் சன்னதியில் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:45 மணிக்கு மகாகணபதி பூஜை நடந்து, தீபாராதனையுடன் யாகசாலை பூஜை துவங்கின. தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. பின்னர் 108 கலசங்கள் அடங்கிய மகா பைரவ ஹோமம் துவங்கியது.108 பால சிவாச்சாரியர்களால் லட்சார்ச்சனையும் நடைபெற்றது. இரவு 9:30 மணிக்கு நெய்,வஸ்திரம், புஷ்பயாகம், மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் சிவாச்சார்யார்களால் சுற்றுப்பிரகாரம் வழியாக புறப்பாடு நடந்தது. பின்னர் பைரவருக்கு அபிேஷகம் நடந்து சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாட்டினை மகாஸ்ரீசுவாமிநீ பீடத்தினர் செய்தனர்.