உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் 18 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதியில் 18 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி :திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்தனர். திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்ட்டுள்ளதால் நேற்று முதல் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனால் திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு வளாகத்தில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.அவர்கள் 18 மணிநேர காத்திருப்பிற்கு பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் 66 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசித்தனர்; 25 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !