திருவாடானை பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :202 days ago
திருவாடானை: திருவாடானை அருகே குளத்துார் குலசேகரபெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள், பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. ஏகாதசியை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.