உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

 புதுச்சேரி: அனுமன் ஜெயந்தி விழா வரும் 25 ம் தேதி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திண்டிவனம் - புதுச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இந்த ஆண்டு வரும் 25ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று மாலை 6  மணிக்கு அனுமன் ஜெயந்தி உற்சவம் ஆரம்பம், பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை மகாசங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. இன்று 22ம் தேதி காலை 7:00 மணிக்கு எஜமான  சங்கல்பம், கும்பஸ்தாபனம், அக்னி மதனம், சாற்றுமுறை லட்சார்ச்சனையும், மாலை 5:00 மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சசூக்த ஹோமமும், மூலமந்த்ர ஹோமமும், பூர்ணாஹூதி  நடக்கிறது.நாளை 23ம் தேதி காலை 7:00 மணிக்கு பஞ்சசூக்த ஹோமம் , மூலமந்தர ஹோமம், மாலை 5:00 மணிக்கு சாற்றுமுறை லட்சார்ச்சனையும், 24 ம் தேதி பஞ்சசூக்த ஹோமமும்,  பூர்ணாஹூதியும் நடக்கிறது.வரும் 25ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மூலவர் ஆஞ்ஜநேயருக்கு 2,000 லிட்டர் பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை  திரவியங்களுடன் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் ஆஞ்ஜநேயர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் அனைவருக்கும் காலை 10:00 மணி முதல் சிறப்பு அன்னதானம்  வழங்கப்படுகிறது. அன்று மாலை 4:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !