திருப்பூர் காஞ்சி மகா பெரியவர் பாதுகை தரிசனம்
ADDED :2142 days ago
திருப்பூர்: பஜனை மடத்தில் வைக்கப்பட்டிருந்த காஞ்சி மகா பெரியவரின் பாதுகையை, ஏராள மான பக்தர்கள் தரிசனம் செய்தனர்காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதி, ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின், 25வது ஆராதனை விழா, நேற்று 24ம் தேதி நடந்தது.
திருப்பூர் ஓடக்காடு ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நடந்த விழாவில், மகாபெரியவரின் பாதுகை தரிசனத்துக்கு வைக்கப்பட்டது.தொடர்ந்து, மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை வேத பாராயணம் நடந்தது.தவிர, ’தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பின் கீழ், ஸ்ரீ சர்மா சாஸ்திரி, ஆன்மிக சொற் பொழிவு ஆற்றினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, காஞ்சி மகா பெரியவாளின் பாதுகையை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த சமாஜ நிர்வாகி கள் செய்திருந்தனர்.