வைகுண்ட ஏகாதசி விழா: 1.08 லட்சம் லட்டு தயாரிப்பு
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வரும், 30ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி விழாவில், பரமபத வாசல் திறப்பு விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 1.08 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது.
காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், 800க்கும் அதிகமான தன்னார்வலர்கள் பங்கேற்று, 15 சமையல் கலைஞர்கள் துணையுடன் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடலை மாவு – 2,500 கிலோ, சர்க்கரை –5,000 கிலோ, உலர்திராட்சை, முந்திரி, ஏலக்காய், கிராம்பு – மொத்தம் 250 கிலோ, பசு நெய் –25 டின் (375 கிலோ) , ரீபைண்ட் ஆயில் –100 (1,500 கிலோ) டின் ஆகிய பொருட்களை கொண்டு, லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது; இன்று பணி நிறை வு பெறுகிறது.