உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் நடைபெற உள்ளது.


திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோத்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை – மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, இன்று இரவு விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது. நாளை காலை 8:00 – -9:00 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 27ம் தேதி தேர் திருவிழாவும், மார்ச் 1ம் தேதி வள்ளி திருமணம், 2ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !