குழந்தை இயேசுவைகாண வந்தவர்கள்
ADDED :2153 days ago
இயேசு பெத்லகேமில் பிறந்ததும் சாஸ்திரிகள் பலர் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஏலாம் என்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த நாடு தான் தற்போதைய பெர்சியா. நோவாவின் மகன் சேம். இவரது மகன் ஏலாம். இவரது பெயரே இந்த நாட்டுக்கு சூட்டப்பட்டது. இந்த நாட்டிலிருந்து வந்த சாஸ்திரிகள், வான சாஸ்திரம், மருத்துவம், விஞ்ஞானத்தில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர்.