உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்

பழநி கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்

பழநி : அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கிய நிலையில், பழநி கோயிலில்  பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

பழநியில் மலைகோயிலில் விடுமுறை நாளான நேற்று 25ல், பக்தர்கள் கூட்டம்  அதிகமாக இருந்தது. ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் பக்தர்கள் 3 மணி நேரம்  காத்திருந்து சென்று தரிசனம் செய்தனர். அன்னதான கூடங்களில் கூட்டம்  அதிகம் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதவிர இடும்பன் கோயில்  ரோடு, சன்னதி வீதி, பூங்கா ரோடு, அருள்ஜோதி வீதி என கோயிலை சுற்றிலும்  வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திருஆவினன்குடி கோயில் பகுதியில்  ஆட்டோக்கள் அதிக அளவு நிறுத்தப்பட்டிருந்ததால் பக்தர்கள் நடக்கவே  சிரமப்பட்டனர்.

இதுகுறித்து பழநி சமூக ஆர்வலர் மோகன் கூறுகையில், ”சிறு வியாபாரிகளும்  பொருட்களை கைகளிலும், டூவிலர்களிலும் வைத்துக்கொண்டு குறுக்கும்  நெடுக்குமாக சென்று வியாபாரம் செய்வது, கூடுதல் போலீசார் நியமிக்காமல்  இருப்பது போக்குவரத்து நெருக்கடிக்கு காரணம்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !