ஈரோடு கோவில்களில் அன்னதானம்
ADDED :2146 days ago
ஈரோடு: இன்று 26ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடப்பதால், கோவில் நடை காலை, 6:00 மணி முதல் மதியம், 12:30 வரை அடைக்கப்பட்டிருக்கும். இதனால், தினமும் இடைவிடாமல் நடக்கும் அன்னதானம் திட்டம் இன்று செயல்படுமா என பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார் கூறியதாவது: சூரிய கிரகணம் நிகழ்வு இன்று மதியம், 12:30 மணியுடன் நிறைவடைகிறது. சூரிய கிரகண நிகழ்வு சமயத்தில், நடை அடைக்கப்பட்டிருக்கும். பிரத்தியேகமாக உள்ள மண்டபத்தில், வழக்கம் போல் சமையல் செய்யப்பட்டு, சூரிய கிரகண நிகழ்வு முடிந்த பின்பு அன்னதானம் வழங்கப்படும். எந்த நிலையிலும் நிற்காது. வழக்கம் போல், பக்தர்கள் மதியத்துக்கு மேல் வந்து சுவாமி தரிசனம் செய்த பின், உணவருந்தி செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.