உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கிரகணத்தின் போது நடை திறந்து வழிபாடு

திருவண்ணாமலையில் கிரகணத்தின் போது நடை திறந்து வழிபாடு

திருவண்ணாமலை: உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சூரிய கிரகணம் துவங்கிய போது கோயிலுக்குள் இருக்கும் பிரம்ம தீர்த்த குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. அடுத்ததாக சூலம் ரூபத்தில் இருக்கும் அண்ணாமலையாருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்  பிரம்ம தீர்த்த குளத்தில் சிவாச்சியார்கள் தியானத்தில் ஈடுபட்டனர். எங்கும் இல்லாதபடி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சூரிய கிரகணத்தின் போது நடைதிறந்து இருந்தது, ஆனால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !