கோபி மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED :2146 days ago
கோபி: கோபி-மொடச்சூர் சாலையில், மாகாளியம்மன் கோவில், பொங்கல் திருவிழா கோலாகலமாக நேற்று 25ம் தேதி நடந்தது. பிள்ளையார் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் 24ம் தேதி இரவு, 7:00 மணிக்கு தீர்த்தக்குடம் புறப்பாடு நடந்தது.
பின், மகாளியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று 25ம் தேதி காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் மாவிளக்கு புறப்பாடு, தீபாராதனை நடந்தது.
ஏராளமான பெண்கள் நேற்று 25ம் தேதி காலை பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். கோபி, பச்சமலை சாலை, மொடச்சூர் சாலை, புதுப்பாளையம், சீத்தாலட்சுமிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.