உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி அருகே, பவளமலை முருகன் கோவிலில் அணையா விளக்கு

கோபி அருகே, பவளமலை முருகன் கோவிலில் அணையா விளக்கு

கோபி: கோபி அருகே, பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், அணையா  விளக்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நடந்த தீ  விபத்துக்கு பின், தமிழகம் முழுவதும் கோவில்களில் தீபமேற்றி வழிபடும்  முறையில், பாதுகாப்பு விதிகளை கடை பிடிக்க, இந்து சமய அறநிலையத்துறை  அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, விளக்கில் தீபமேற்றும் முறைக்கு மாறாக, பிரபல கோவில்களில், அணையா விளக்கு முறை கடைபிடிக்கப்படுகிறது. தவிர, அசாதாரண சூழலில் ஏற்படும் தீ விபத்து சமயங்களில், தீ எச்சரிக்கை கருவி வைக்க உத்தரவிடப் பட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், கடந்தாண்டில் அணையா விளக்கு மற்றும் தீ எச்சரிக்கை கருவி வைக்கப்பட்டது. இதேபோல், கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சமீபத்தில் அணையா விளக்கு வைக்கப்பட்டது.

தற்போது பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், முருக பக்தர் ஒருவர், இரு அணையா விளக்குகளை உபயம் செய்துள்ளார். இனி பவளமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் கண்ட இடங்களில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், கோவில் சுவற்றில் எண்ணெய் கரை படியாத வகையில், சுத்தம் காக்க கோவில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !