உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பென்னாகரம் முத்தத்திராயன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பென்னாகரம் முத்தத்திராயன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பென்னாகரம்: பென்னாகரம் தாலுகா, நெருப்பூர் அருகே முத்தத்திராயன் கோவில்  உள்ளது. இக்கோவில் சந்தன மர கடத்தல் வீரப்பன் வழிபட்டு வந்ததால்,  அக்கோவிலை வீரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நேற்று 25ல், மார்கழி மாத அமாவாசை என்பதால், பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான  பக்தர்கள் வந்திருந்தனர்.

அவர்கள், முத்தத்திராயன் சுவாமிக்கு கடந்த மாதம் அமாவாசை முதல் மாலை அணிந்து, விரதமிருந்து கோவிலுக்கு நேற்று 25ல் வந்து, தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அவர்கள், அதிகாலை நாகமரை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு பூஜை செய்து, தங்கள்  விரதத்தை முடித்தனர்.

சாமி சிலையை கோவிலை சுற்றி பக்தர்கள் வலம் கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் கிரிவல பாதையில் படுத்து, சுவாமி சிலை தங்களை தாண்டி செல்லும் வகையில் படுத்திருந் தினர். சுவாமி சிலை தங்களை கடந்து சென்றால், அதன் மூலம் தங்கள் மீதுள்ள தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் தங்களின் வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர்.  

அசம்பாவிதங்களை தடுக்க, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !