வைகுண்ட ஏகாதசி: ஊட்டி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
ஊட்டி: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, ஊட்டி உட்பட மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் வேணுகோபால சுவாமி கோவிலில் காலை, 4:00 மணிக்கு திருபள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடந்தது. 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.
தொடர்ந்து, காலை, 10:35 மணிக்கு கருட வாகனத்தில், உற்சவர் ருக்குமணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி திருவிதி உலா, முக்கிய வீதிகளின் வழியாக வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் ஆனந்த், ஸ்ரீதர், ஹரி செய்திருந்தனர்.
* ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி திருவீதி உலா நடந்தது.
* ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது. அதில், ஆஞ்சநேயர் பெருமாள் அலங்காரத்தில் காட்சியளித்தது கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் சடகோபன், முராஹரி, ஹரி செய்திருந்தனர்.
* ஊட்டி எச்.பி.எப்., நீலமலை திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், காலை, 4:00 மணிக்கு சுப்ரபாதம் சேவை, விஸ்வரூப தரிசனம், 4:45 மணிக்கு பெருமாள் புறப்பாடு, 5:00 மணிக்கு பரமபதி வாசல் ஆராதனை, 5:15 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, விசேஷ திருவாராதனம், அலங்கார தளிகை, சாற்றுமுறை தீர்த்த பிரசாத கோஷ்டி நடந்தது. மாலை ஊஞ்சல் சேவை, திருவராதனம், ஏகாந்த சேவை, நீரா ஜனம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
* கூடலுார் சக்தி விநாயகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீ வெங்கடாசலபதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, கோவில் குருக்கள் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை, 6:00 மணிக்கு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 7:15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மகாதீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடாசலபதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, கோவில் குருக்கள் கார்த்திகேயன் தலைமையில் நேற்று, நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6:00 மணிக்கு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7:15 மணிக்கு வாசல் திறக்கப்பட்டு மகாதீபதரனை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல, மாவட்டம் முழுவதும், ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், ஆ ஞ்சநேயர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.