உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலுார்பேட்டையில் இருமுடி கட்டிய பக்தர்கள் ஊர்வலம்

அவலுார்பேட்டையில் இருமுடி கட்டிய பக்தர்கள் ஊர்வலம்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற பக்தர்கள்  இருமுடி கட்டி ஊர்வலமாக மேல்மருவத்துார் சென்றனர்.அவலுார்பேட்டையில்  மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சில தினங்களுக்கு முன்  கலச விளக்கு யாக பூஜை நடந்தது.

அப்போது சக்தி மாலை அணிந்த பக்தர்கள், நேற்று முன்தினம் 24ம் தேதி காலை இருமுடி கட்டி மேல்மருவத்துாருக்கு புறப்பட்டனர்.முன்னதாக மன்ற பொருப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைவரும் கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிறப்பு வழிபாடு முடிந்ததும் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !