உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலத்தில் அனுமத் ஜெயந்தி விழா

சின்னசேலத்தில் அனுமத் ஜெயந்தி விழா

சின்னசேலம் : சின்னசேலத்தில் பஸ் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேய சுவாமி  கோவிலில் 25ம் தேதி, அனுமன் ஜெயந்திவிழா நடக்கிறது.

அதனையொட்டி, இன்று 25ம் தேதி சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சொற்பொழிவும் அதனையடுத்து அன்னதானம் வழங்கப்படு கிறது. நாளை 26ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

இதில், கோவிலில் உள்ள சிறிய தேரில் சுவாமி உள் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்ரமணிய குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !