சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2110 days ago
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள சூரிய பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பாகூரில் உள்ள பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதவர் சுவாமி கோவிலில், தனி சன்னதியில் மேற்கு திசை பார்த்தவாறு சூரிய பகவான் அருள் பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தையொட்டி காலை 7.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் கோவிலில் சுத்தம் செய்யப்பட்டு, இரவு 7.00 மணிக்கு சூரிய பகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.